சிங்கப்பூர்-தமிழ்நாடு போதுமான விமான சேவை இல்லை: கடும் அவதிக்குள்ளாகும் பயணிகள்

covid-testing-indian-airports explain

சிங்கப்பூா், மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவை என்பது இன்றளவில் போதுமானதாக இல்லை, இதன் காரணமாக தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த விமான சேவை பாதிப்பு காரணமாக அன்னியச் செலவாணியில் கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

பூனைக்குட்டியும் எங்களுக்கு உயிர் தான் – விரைந்து சென்று குட்டியை காப்பாற்றிய சிங்கப்பூர் காவல்துறை

கிருமித்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் இந்திய அரசு வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடைவிதித்தது நாம் அறிந்தது தான்.

இருப்பினும் கூட, இந்திய பயணிகள் செல்ல UAE, கத்தார், குவைத் போன்ற நாடுகளுடன் இந்திய அரசு ‘ஏா் பப்புள்’ என்னும் பாதுகாப்பான பயணத்தில் தற்காலிக ஒப்பந்தம் போட்டுள்ளது.

‘ஏா் பப்புள்’ உடன்பாட்டின்கீழ், மேற்கூறிய நாடுகளுக்கு விமான சேவை பாதுகாப்பான முறையில் இயங்கி வருகிறது. இந்திய பயணிகளும் பாதுக்காப்பாக சென்று வருகின்றனர்.

ஆனால், தமிழா்கள் அதிகம் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சிங்கப்பூா், மலேசியா ஆகிய நாடுகளுடன் இதுவரை அதுபோன்ற எவ்வித தற்காலிக ஒப்பந்தமும் இல்லை.

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏா் இந்தியா ஆகிய இந்திய விமானங்கள் மட்டுமே ‘வந்தேபாரத்‘ சிறப்பு திட்டத்தின்கீழ் இயங்கி வருகிறது. இதனால் அவரசத்துக்கு தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

இந்த நவம்பா் மாத சிங்கப்பூர் to திருச்சி சேவை அனைத்து புக் செய்யப்பட்டால் நிரம்பிவிட்டன. அடுத்த மாத விமான அட்டவணையும் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதனால், பயணிகள் கடும் சிக்கலுக்கு தள்ளப்படுகின்றன. இருநாடுகளுக்கும் விமான சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.

2028ஆம் ஆண்டுக்குள் இவர்களுக்கு அடிப்படை மாத சம்பளம் S$3,530ஆக அதிகரிக்கும்