பூனைக்குட்டியும் எங்களுக்கு உயிர் தான் – விரைந்து சென்று குட்டியை காப்பாற்றிய சிங்கப்பூர் காவல்துறை

Singapore Police Force

சிங்கப்பூர் போலீஸ் படை குற்றத்தைத் தடுப்பதற்கும் தீர்ப்பதற்கும் மட்டுமல்ல என்பதை இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது.

புக்கிட் பாஞ்சாங்கில் சிக்கித்தவிக்கும் பூனைக்குட்டியை மீட்க உதவுமாறு பொதுமக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்தச் சம்பவம் கடந்த அக். 31 காலை 8:45 மணியளவில் பிளாக் 249 பங்கிட் சாலையில் உள்ள கார் பார்க்கிங்கில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

2028ஆம் ஆண்டுக்குள் இவர்களுக்கு அடிப்படை மாத சம்பளம் S$3,530ஆக அதிகரிக்கும்

என்ன நடந்தது?

இரண்டு போலீஸ் அதிகாரிகள், நஸ்ருல் மற்றும் அத்திகா ஆகியோர் கார் பார்க்கிங்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ​​பொதுமக்களில் ஒருவர் அவர்களை அணுகினார்.

அப்போது வாகனத்தின் எஞ்சினில் இருந்து பூனைக்குட்டிகளின் சத்தம் கேட்டதாகக் கூறிய அவர், அதிகாரிகள் அதில் சோதனை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

அப்போது பூனைக்குட்டி காரின் அடித்தளத்தில் சிக்கி இருந்தது. அது எப்படி அங்கு வந்தது என்று தெரியவில்லை.

இதையடுத்து பூனைக்குட்டியை மீட்ட அதிகாரிகள் சோதனை செய்ததில் அதுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும், பூனைக்குட்டியின் மீது குறிச்சொல் எதுவும் இல்லை என்றும், அது யாருக்கும் சொந்தமானதாக இருக்க வாய்ப்பில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பூனைக்குட்டியை பத்திரமாக மீட்ட போலீசார் அதை கையில் வைத்திருக்கும் புகைப்படம் முகநூல் வழியாக வெளியானது. அதற்கு உதவிய அதிகாரிகளை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூர் கடல்சார் துறையில் வேலை வாய்ப்பு!!!