சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்: 170 நாடுகளில், 5 லட்சம் பயணிகளுக்கு “இலவச விசா” வழங்கும் இந்தியா!

AP/Rishi Lekhi

இந்தியாவுக்கு வரும் முதல் ஐந்து லட்ச வெளிநாட்டு பயணிகளுக்கு இலவசமாக விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச விமான சேவையை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது இந்தியா.

“மதுரை-சிங்கப்பூர்” பயணிகளுக்கு இன்பச்செய்தி… இன்று (மார்ச் 29) முதல் விமான சேவை இனிதே துவக்கம்!

“கோவிட்-19 தொற்றுநோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், “இந்திய நாட்டுக்கு செல்ல விசா பெறுவதை எளிதாக்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என அவர் கூறினார்.

“இனி, 170 நாடுகளில், இந்திய தூதரகங்களை அணுகி விசா பெற வரிசையில் நிற்க வேண்டியதில்லை.”

“வெளிநாட்டு பயணிகள் செய்ய வேண்டியதெல்லாம் ஆன்லைனில் விண்ணப்பத்தை அனுப்பினால் போதும், அவர்களுக்கு இ-விசா வழங்கப்படும்” என்று கிஷன் ரெட்டி கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல விரும்பும் பயணிகளுக்கும் இது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் சிங்கப்பூர்-இந்தியா இடையே பாதுகாப்பான பயண ஒப்பந்தம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இன்று (மார்ச் 29) முதல் வெளி இடங்களில் “மாஸ்க் கட்டாயமில்லை” – கட்டுமான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!