சிங்கப்பூரில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இந்திய அமைச்சர் தரிசனம்!

Photo: Minister Piyush Goyal Official Twitter Page

சிங்கப்பூரில் அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தொழில் மற்றும் வர்த்தகம் துறை அமைச்சர் பியூஷ் கோயல், செப்டம்பர் 24- ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை சிங்கப்பூரில் 397, செராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, இந்திய அமைச்சருடன் இந்திய தூதர் குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள், சிஇஓ-க்களை நேரில் சந்தித்த இந்திய அமைச்சர்!

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அரசின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினத்தை (Senior Minister Tharman Shanmugaratnam, Singapore Senior Minister & Coordinating Minister for Social Policies) இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்துவது, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

Photo: Minister Piyush Goyal
Official Twitter Page

புதைக்கப்பட்ட ஊழியரின் தாய்… வீட்டுக்கு திரும்பி வந்த அதிர்ச்சி; பயத்தில் உறைந்த உறவினர்கள் – என்ன தான் நடந்தது ?

பின்னர், இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் வாழ் இந்தியர்களை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியர்கள் மத்தியில் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.