புதைக்கப்பட்ட ஊழியரின் தாய்… வீட்டுக்கு திரும்பி வந்த அதிர்ச்சி; பயத்தில் உறைந்த உறவினர்கள் – என்ன தான் நடந்தது ?

புதைக்கப்பட்ட ஊழியரின் தாய்... வீட்டுக்கு திரும்பி வந்த அதிர்ச்சி; பயத்தில் உறைந்த உறவினர்கள் - என்ன தான் நடந்தது ?

சென்னையில் 72 வயது மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கருதி அவரை அடக்கம் செய்துள்ளனர்.

ஆனால், உயிருடன் மீண்டும் வீடு திரும்பியதால் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

எஸ் சந்திரா என்ற மூதாட்டி செப். 20 அன்று ரயிலில் அடிபட்டு இறந்தார் என அவரின் குடும்பம் முடிவு செய்தது. ஏனெனில், தாய் அணிந்திருந்த அதே புடவையை அந்த சடலமும் அணிந்திருந்ததால், அது தனது தாயின் உடல் என அவரது மகன் வடிவேலு மூலம் அடையாளம் காணப்பட்டது.

மேலும், சடலத்தின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்ததால் இவ்வளவு அக்கப்போரு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேட்டியை கழட்டி ஓடவிடப்பட்ட பட்டுக்கோட்டை சாமியார் – ராஜ தந்திரங்கன் அனைத்தும் வீணாகி விட்டதே..!

கடந்த செப்டம்பர் 19, சந்திரா தனது வீட்டிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்குச் செல்வதாகவும், விரைவில் திரும்புவதாகவும் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இருப்பினும், அவர் திரும்பி வரவில்லை, கூடுதலாக அந்த பகுதியில் உள்ள வேறு சில கோயில்களுக்குச் செல்ல முடிவு செய்து அவர் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மூதாட்டியை காணவில்லை என அவரது மகன் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

செப்., 20ல், ரயிலில் அடிபட்டு இறந்த மூதாட்டி குறித்து, வடிவேலுவுக்கு அவரது உறவினர்கள் மூலம் தகவல் கிடைத்தது. பின்னர் உடலை அடையாளம் காண மருத்துவமனைக்கு வருமாறு அதிகாரிகளிடமிருந்தும் அவருக்கு அழைப்பு வந்தது.

இறந்தவர் அவரின் தாயார் அணிந்திருந்த அதே சேலையை அணிந்திருந்தார், மேலும் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சேதமடைந்து இருந்ததால், அங்க அடையாளங்களின் அடிப்படையில் உடல் சந்திராவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டப்பட்டு இறுதிச்சடங்குக்கு பின் அடக்கமும் செய்யப்பட்டது.

பின்னர் கடந்த செப்., 22ல், வீட்டில் துக்கம் விசாரிக்க உறவினர்கள் குவிந்த நிலையில், சந்திரா வீடு திரும்பியுள்ளார்.

அவரது குடும்பத்தினர் அவரை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர், சிலர் அங்கு இருந்து ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரா, வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களில் அவரது இரங்கல் சுவரொட்டிகளைக் கண்டு அவரும் பெரும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சந்திரா நடந்ததை கூற, பிறகு தான் உண்மை தெரியவந்துள்ளது. அதன் பின்னர் புதைக்கப்பட்ட உடலை போலீசார் தோண்டி எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி பத்மா என்றும் அவர் தாம்பரத்தை சேர்ந்தவர் என்றும், பின்னர் அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

“தூரமா போனும் காசு இருந்த தாங்க”…சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் பலரை ஏமாற்றி S$28,000 வரை பெற்ற ஆடவருக்கு சிறை