“தூரமா போனும் காசு இருந்த தாங்க”…சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் பலரை ஏமாற்றி S$28,000 வரை பெற்ற ஆடவருக்கு சிறை

outrage of modesty train arrest
(Photo: Quinn Kampschroer via Pixabay)

ரயில் நிலையங்களில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளில், சுமார் S$28,000 கடன் வாங்கி ஏமாற்றியதன் தொடர்பில் ஆடவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பைரன் யேவ் லி சூன் என்ற அந்த ஆடவர் மற்றவர்கள் காட்டும் இரக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் இந்த ஏமாற்று வேலையை செய்துள்ளார்.

தூரமாக செல்ல வேண்டும் அதற்காக போக்குவரத்து செலவுக்கு பணம் வேண்டும் என மொத்தம் S$28,000 கடன் வாங்கியுள்ளார் அவர்.

சிங்கப்பூரில் வேட்டியை கழட்டி ஓடவிடப்பட்ட பட்டுக்கோட்டை சாமியார் – ராஜ தந்திரங்கன் அனைத்தும் வீணாகி விட்டதே..!

யேவ் சுமார் 78 பேரை ஏமாற்றியுள்ளார், அவர்களில் பலர் மாணவர்கள், மேலும் அவர் அவசரத்தில் இருப்பதாகவும், தூரம் செல்வதற்கு பணம் தேவை என்றும் அவர்களை நம்பவைத்தார்.

ஒருமுறை, தனது வங்கிக் கணக்கில் S$2,100 மட்டுமே வைத்திருந்த ஒரு முழுநேர தேசிய சேவையாளரிடம் பொய்யாக கூறி S$2,000 கடன் வாங்கியுள்ளார் யேவ்.

தற்போது 26 வயதாகும் அவர், ஐந்து மோசடி குற்றச்சாட்டுகளுக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று (செப்டம்பர் 23), ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 18 குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழு பணத்தையும் அவர் செட்டில்மென்ட் செய்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை பார்த்த நடிகர் போண்டா மணி… தற்போது மருத்துவ செலவுக்கே வழியில்லா சோகம்