இந்தியாவின் “கிருமி தொற்று ஆபத்து அதிகம்” உள்ள பட்டியலில் இடம் பிடித்த “சிங்கப்பூர்”

இந்தியாவின் “கிருமி தொற்று ஆபத்து அதிகம்” உள்ள இடங்களின் பட்டியலில் சிங்கப்பூரும் இடம் பிடித்துள்ளது.

அதன் காரணமாக சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு வருகையின் போது கூடுதல் COVID-19 நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை-சிங்கப்பூர் இடையே திட்டமிட்டபடி விமான சேவை வழங்கும் “இண்டிகோ”

Omicron மாறுபாட்டின் பரவலை சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இந்த புதிய மாறுபாடு, தடுப்பூசிகளை எதிர்க்கும் தன்மை வாய்ந்ததோ என்றும், கிட்டத்தட்ட இரண்டு வருட கால COVID-19 தொற்று சூழலை நீடிக்கக்கூடுமோ என்ற கவலையையும் உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 28ஆம் தேதி அன்று இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது.

அதில் யுனைடெட் கிங்டம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு கடுமையாகும் சோதனை – டிசம்பர் 3 முதல் புதிய நடைமுறை