20 மாத கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது: வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் எல்லையை திறந்தது இந்தியா!

இந்தியா தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்துள்ளது, இதனால் நடப்பில் இருந்த 20 மாத தடை முடிவுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைவாக இருப்பதால், தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்கள் இனி விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுற்றுலா விசாவை நிறுத்தியது இந்தியா, அதன் பின்னர் தற்போது 99 நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்தல் இல்லாமல் இந்தியா நுழைய முடியும்.

அந்த பட்டியலில் சிங்கப்பூரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்தகைய சுற்றுலாப் பயணிகள் வருகைக்குப் பிறகு 14 நாட்களுக்கு மட்டுமே அவர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கோருகிறது.

கடந்த மாதம் முதல், சார்ட்டர்ட் விமானங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது, மேலும் வணிக விமானங்களில் வருபவர்களுக்கும் அதை இந்திய அதிகாரிகள் இன்று (நவம்பர் 15) விரிவுபடுத்தினர்.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமை இல்லா பயணத்தை தொடங்கும் சிங்கப்பூர்