இந்தியாவின் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய ஸ்கூட்… பயணிகளுக்கே தெரியாத குளறுபடி – சிக்கி தவித்த பயணிகள்

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

இந்தியாவின் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய ஸ்கூட் விமானத்தில் பயணிகள் பலர் ஏறவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அமிர்தசரஸில் இருந்து திரும்பிய TR509 விமானத்தில் பயணிக்காமல் முடியாமல் மொத்தம் 29 பயணிகள் சிக்கித் தவித்தனர்.

சூட்கேஸில் சடலமாக கிடந்த வெளிநாட்டு ஊழியர் – துண்டு துண்டாக கிடந்த பிரேதம்

விமான நேரம் அந்த பயணிகளுக்கே தெரியாமல் மாற்றியமைக்கப்பட்டதால் இந்த குளறுபடி நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஜனவரி 18 ஆம் தேதி, சீரற்ற வானிலை காரணமாக ஸ்கூட் விமானம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட தொடர்பு விவரங்களின் அடிப்படையில், அனைத்து பயணிகளுக்கும் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே மின்னஞ்சல் மற்றும்/ அல்லது SMS மூலம் இந்த மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த இடையூறுகளுக்காக ஸ்கூட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

மாதச் சம்பளம் S$1,400 – பகுதி நேர சம்பளம் S$9… இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 1,900 நிறுவனங்களுக்கு அங்கீகாரம்