தனிமை இல்லா பயண அனுமதி: இந்திய பயணிகள், ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி

All foreigners can automated lanes singapore travel
Pic: Foreign workers Singapore risk

இந்தியாவுடன் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் (VTL) சிங்கப்பூர் பயண ஏற்பாடை விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவுடன் வரும் நவம்பர் 29, முதல் பயணத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக சிங்கப்பூர் நேற்று அறிவித்தது.

இந்திய பயணிகளுக்கு சிங்கப்பூர் அனுமதி… அதற்கான விண்ணப்பங்கள் எப்போது துவங்கும்?

இந்நிலையில், இந்த அனுமதிக்கு இந்திய பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர், குறிப்பாக இந்திய ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூரில் தங்கள் பணிகளை அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

சமூக ஊடங்களில் இந்த அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்து இந்திய பயணிகள் பலர் பதிவிட்டுள்ளனர், சிங்கப்பூரை சார்ந்துள்ள தமிழக ஊழியர்கள் பெரும்பாலானோரும் இதற்கு மகிழ்ச்சி கூறி பின்னூட்டம் செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு பிறகு இருநாடுகளிடையே விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. குடும்ப உறவுகள், தொழில், மருத்துவம் என பல்வேறு வகையில் இருநாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவின் வந்தே பாரத் திட்டம் செயல்பட்டாலும், போதுமான விமானம் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வந்தது, இந்நிலையில் இந்த அறிவிப்பு இந்திய பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அதோடு மட்டுமல்லாமல், கத்தார், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுடனும் சிங்கப்பூர் VTL பயண ஏற்பாடை விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து வரும், குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான VTL விண்ணப்பங்கள் நவம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கும்.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமை இல்லா பயணத்தை தொடங்கும் சிங்கப்பூர்