இந்திய பயணிகளுக்கு சிங்கப்பூர் அனுமதி… அதற்கான விண்ணப்பங்கள் எப்போது துவங்கும்?

who came to Chennai from Singapore was arrested

இந்தியா, இந்தோனேஷியா, கத்தார், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுடன் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் (VTL) சிங்கப்பூர் பயண ஏற்பாடை விரிவுபடுத்தியுள்ளது.

வரும் நவம்பர் 29, முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவுடன் சிங்கப்பூர் VTL பயண ஏற்பாட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று அறிவித்தது.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமை இல்லா பயணத்தை தொடங்கும் சிங்கப்பூர்

இந்த அறிவிப்பு தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண (VTL) திட்ட விரிவாக்கத்தின் கூடுதல் நடவடிக்கை ஆகும்.

மேலும் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் அடுத்த மாதம் டிசம்பர் 6ஆம் தேதி முதல் சிங்கப்பூர் VTL பயண ஏற்பாட்டை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான VTL விண்ணப்பங்கள் நவம்பர் 22, முதல் தொடங்கும்.

கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு நவம்பர் 29 முதல் VTL விண்ணப்பங்கள் தொடங்கும்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்கள் இனி விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி