இந்திய பயணிகளுக்கான பயண சேவையை அதிகரிக்க உள்ள சிங்கப்பூர்.!

இந்தியாவுக்கான VTL திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைமைக்கு உயர்த்தப்படும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் திரு. ஓங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் மற்றும் பலதுறை மருந்தகங்களில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் திரு. ஓங் இதனை குறிப்பிட்டிருந்தார்.

Work Permit வைத்துள்ளவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோருக்கு சிங்கப்பூர் நுழைய அனுமதி!

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவப் பணியாளர்கள் நாடு திரும்பி தங்கள் பிரியமானவர்களை பார்க்க இது உதவும் என்றும், சிங்கப்பூர் வந்த பின்னர் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும் மேலும், பிலிப்பைன்ஸ் உடனும் சிங்கப்பூர் VTL பயணப் பாதையை அமைக்கும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

மருத்துவப் பணியாளர்கள் வரும் நாட்களில் எடுத்துக்கொள்ளும் மருத்துவ விடுப்பை மருத்துவமனை விடுப்பாகவும் பதிந்து கொள்ளலாம் என்றும், மருத்துவப் பணியாளர்களின் பணிச்சுமையையும், அழுத்தத்தையும் குறைக்க அரசு எடுக்கவுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

VTL பயணப் பாதை திட்டத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளை சேர்ந்த 500 பயணிகளுக்கு சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை நிராகரிக்கிறதா சிங்கப்பூர்…?