பணிப்பெண்ணுக்கு சூடு வைத்த நபருக்கு சிறை!

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

 

இந்தியாவைச் சேர்ந்த வடிவேல் கௌதமி என்பவர், வேலைக்காக முதல் முறையாக சிங்கப்பூருக்கு வந்திருந்தார். அங்கு அவரின் கணவனின் அத்தையைத் தவிர வேறு யாரையும் அவருக்கு தெரியாது. மாதம் 400 சிங்கப்பூர் டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கௌதமி, கடந்த 2018- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜூரோங் வெஸ்ட் ஃபிளாட்டில் உள்ள ராஜமாணிக்கம் சுரேஷ்குமார் (வயது 35) என்பவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.

அங்கு அந்த பெண் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்தார். வீட்டைச் சுத்தம் செய்வது, சமையல் உள்ளிட்ட பணிகளை மட்டும் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூலை மாதம் கௌதமி தான் இந்தியாவிற்கு திரும்புவதாக முகவரிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் முகவர் நடந்ததை ராஜமாணிக்கம் சுரேஷ்குமார் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆடவர் COVID-19 காரணமாக மரணம்

இந்நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18- ஆம் தேதி அன்று இரவு மதுபோதையில் வீடு திரும்பிய ராஜமாணிக்கம் சுரேஷ்குமார், சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த கௌதமியை, சூடாக்கப்பட்ட உலோக கரண்டியால் அவரின் இடது கைக்கு சூடு வைத்துள்ளார். அதேபோல், மறுநாளும் இரவு 10.30 மணிக்கு மதுபோதையில் வீடு திரும்பிய ராஜமாணிக்கம் சுரேஷ்குமார், மாமியார் வீட்டில் இருந்த தனது மகளை அழைத்து வருமாறு, அந்த பெண்மணியிடம் கூறியுள்ளார். இதற்கு கௌதமி தனது வேலை முடிவுற்றதால் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம் சுரேஷ்குமார், இரவு 10.00 மணிக்குள் தூங்க வேண்டும் என மனித வள அமைச்சகம் கூறிய பிறகும், ஏன் தூங்கவில்லை எனக் கேட்டு, அந்த பணிப்பெண்ணின் இடது கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து அறைக்குள் தள்ளியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறைக்கு பணிப்பெண் கௌதமி புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர் ராஜமாணிக்கம் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (17/08/2021) நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ராஜமாணிக்கம் சுரேஷ்குமார் மீது சுமத்தப்பட்ட பணிப்பெண்ணின் கைக்கு சூடு வைத்தது, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து அறைக்குள் தள்ளியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டனர்.

இதையடுத்து, வீட்டின் உரிமையாளரான ராஜமாணிக்கம் சுரேஷ்குமாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.