கிராஞ்சி போர் நினைவுச் சின்னத்தில் இந்திய ராணுவ தளபதி மலர்வளையம் வைத்து அஞ்சலி!

photo: Indian Army Official Twitter Page

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று (04/04/2022) கிராஞ்சி போர் நினைவுச் சின்னத்திற்கு (Kranji War Memorial) சென்று, இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், அங்கு வைக்கப்பட்டிருந்த விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு தடுப்பூசி தகுதி நீட்டிப்பு.!!

வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும், இந்திய ராணுவ தளபதி, சிங்கப்பூர் ராணுவ தளபதி, மூத்த ராணுவ அதிகாரிகள், சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

சிங்கப்பூரில் எளிதாக்கப்பட்ட covid-19 விதிமுறைகள் – இரவு நேர விடுதிகள் மற்றும் Discotheque முழுமையாக இயங்குவதற்கு அனுமதி

அதைத் தொடர்ந்து, சாங்கி கடற்படைத் தளம் (Changi Naval Base), இன்போ பியூஷன் மையம் (Info Fusion Centre), பிராந்திய எச்ஏடிஆர் ஒத்துழைப்பு மையம் (Regional HADR Coordination Centre) உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்.