சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு தடுப்பூசி தகுதி நீட்டிப்பு.!!

Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின் கீழ் வரும் பயணிகளின் TraceTogether செயலியில் அவர்களின் தடுப்பூசி தகுதி 30 நாட்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்தியர்களால் அதிகரிக்கும் ஹோட்டல் வருவாய் – எப்படி சாத்தியமானது? தெளிவா விளக்கும் புள்ளிவிவரம்!

சிங்கப்பூரில் 30 நாட்களுக்கு மேல் தங்கி இருப்போர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான தங்களின் பதிவை, தேசிய தடுப்பூசிப் பதிவகத்தில் பதிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி தொடர்பில் சிங்கப்பூர் விதித்துள்ள நிபந்தனைக்கு உட்பட்டு அவர்கள் கூடுதல் தடுப்பூசிகள் போடும் தேவையும் ஏற்படலாம் என சுகாதார அமைச்கம் கூறியுள்ளது.

மேலும், 12 அல்லது அதற்கு குறைவான வயதுடைய பயணிகளுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது என்றும் முன்னதாக VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வந்த பயணிகளுக்கு 180 நாட்கள் நீடிக்கும் தற்காலிகத் தடுப்பூசித் தகுதி அவர்களின் TraceTogether செயலியில் இடம்பெற்றது.

“சிரமத்திற்கு மன்னிக்கவும்! எப்படியும் ஒரு மாதமாகி விடும்”, சிங்கப்பூர் பாஸ்போர்ட் குறித்து ICA வெளிப்படையாக வெளியிட்ட அறிவிப்பு!