பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…. இந்திய சமையல்காரருக்கு சிறை!

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

 

இந்தியாவைச் சேர்ந்தவர் 44 வயதான சுஷில் குமார். இவர் சிங்கப்பூரில் உள்ள உணவகத்தில் தலைமை சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2022- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2- ஆம் தேதி அன்று பூன் கெங் ரயில் நிலையத்தில் (Boon Keng train station), வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த 14 வயதான சிறுமியைத் தடுத்து நிறுத்திப் பேச முயற்சி செய்துள்ளார். அந்த சிறுமி வழிதான் கேட்கிறார் என நினைத்து நின்றுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி அச்சம் வேண்டாம் – “தைரியமாக செய்யுங்கள்.. உயிரை காப்பற்றுங்கள்” – ரகசியம் காக்கப்படும் என உறுதி

அந்த சிறுமியின் அனுமதி இல்லாமல், அவரின் தோளில் கை போட்டும், கட்டியணைத்து முத்தமிடும் செயலிலும் குமார் ஈடுபட்டுள்ளார். அத்துடன், தொலைபேசி எண்ணை வலுக்கட்டாயமாக வாங்கிய சுஷில் குமார், தன்னை தொலைபேசியில் அழைக்குமாறும் கூறியுள்ளார்.

இதில் பயந்துப் போன சிறுமி, வீட்டிற்கு சென்றவுடன் பெற்றோரிடம் கூற, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே சிறுமிக்கு, வாட்ஸ் அப்- க்கும் குறுஞ்செய்தி அனுப்பியதும், இரண்டு முறை வீடியோ கால் செய்துள்ளதையும் ஆதாரமாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஷில் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் சில நாட்களில் குமார் ஜாமீனில் வெளியே வந்தார்.

பான் தீவு அதிவிரைவுச்சாலையில் கடும் விபத்து: ஓட்டுநர் மரணம்

பின்னர், சில மாதங்களுக்கு பிறகு கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி அன்று அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்வதற்காக லிஃப்டிற்காகக் காத்திருந்தார் 19 வயது பெண், அப்போது, அந்த பெண்ணின் கையைப் பிடித்த சுஷில் குமார், அந்த பெண் லிஃப்டில் ஏறியதும், அவருடன் சேர்ந்து லிஃப்டில் சென்றதுடன், அந்த பெண்ணிடம் வலுக்கட்டாயமாகப் பேசியுள்ளார். அத்துடன், முத்தமிடமும் முயற்சி செய்துள்ளார்.

இது தொடர்பாக, அந்த பெண் தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இரண்டாவது முறையாக சுஷில் குமாரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் ஜான், ஒரு முறை தண்டனை பெற்றுள்ள நீங்கள், மீண்டும் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறீர்கள். எனவே, சுஷில் குமாருக்கு மூன்று மாதங்கள் மற்றும் நான்கு வாரங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.