சிங்கப்பூரில் 20 ஆண்டுகள் கடும் உழைப்பு.. கட்டுமான ஊழியராக வந்தவர், இன்று 7 கடைகளுக்கு முதலாளி – பிரம்மிக்க வைக்கும் தமிழரின் வாழ்க்கை

MOM/Facebook

சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக கடுமையாக உழைத்த உழைப்பாளி “முதலாளி” ஆன கதை கேட்போரை பிரம்மிக்க வைக்கிறது.

திரு. ராம மூர்த்தி என்ற தமிழக ஊழியர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தார், ​​அப்போது அவரின் வாழ்க்கை கட்டுமானத் துறையில் ஊழியராக தொடங்கியது.

துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 வெளிநாட்டு ஊழியர்கள்… விதிகள் மீறப்பட்டது தான் காரணம் – அறிக்கை

மளிகைக் கடை

இன்று, அவரின் கடின உழைப்பு, பொறுமை மற்றும் விடாமுயற்சியின் மூலம் அவர் ஏழு மளிகைக் கடைகளின் உரிமையாளராக தற்போது உள்ளார்.

அதில் குறிப்பாக இரண்டு கடைகள் வெளிநாட்டு ஊழியர்ளுக்கான பொழுதுபோக்கு நிலையத்தில் அமைந்துள்ளது.

லிட்டில் இந்தியா

தான் கஷ்டப்பட்டு 12 ஆண்டுகளாக சம்பாரித்த பணத்தின் சேமிப்பை கொண்டு திரு மூர்த்தி 2005ஆம் ஆண்டு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன், தன் கட்டுமான வேலையை விட்டுவிட்டு லிட்டில் இந்தியாவில் மினிமார்ட் கடை ஒன்றை தொடங்கினார்.

அதனை அடுத்து தனது முதல் கடை சூடுபிடிக்க , வெற்றியுடன் தன் வாழ்க்கையை தொடங்கினார் திரு மூர்த்தி.

பின்னர் தன் முயற்சியால் சிங்கப்பூரில் அதிகமான கடைகளைத் தொடங்கினார் அவர்.

வெளிநாட்டு ஊழியர் சமூகத்தை மறக்கவில்லை

என்னதான் பெரிய இடத்துக்கு போனாலும் தன் வாழ்க்கை தொடங்கிய புள்ளியான வெளிநாட்டு ஊழியர் சமூகத்தை அவர் மறக்கவில்லை.

அவர்களுக்காக நிறைய உதவிகளை அவர் செய்து வருகிறார் அவர். ஏன் என்று கேட்டபோது, ​​​​”ஊழியர்களை தனது குடும்பத்தின் ஒரு பகுதியாகப் பார்ப்பதாக பகிர்ந்து கொண்டார் திரு மூர்த்தி.

மேலும், “நானும் ஒரு ஊழியராக இருந்தேன், அதனால் என்னால் அவர்களின் வாழ்க்கை போராட்டத்தை புரிந்து கொள்ளமுடிகிறது”.

“கடந்த காலத்தில், ஊழியர்களுடன் தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது, ​​குடும்ப உறுப்பினர்களைப் போல ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வோம்” என்று நாங்கள் அண்ணன் தம்பி போன்றவர்கள் என்பதை சொல்லாமல் சொன்னார் அவர்.

பயனியர் சாலை நார்த்தில் லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் இருக்கையில் சிக்கியவர் (வீடியோ) மருத்துவமனையில் அனுமதி