இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, காதை கடித்து துப்பிய சக ஊழியருக்கு சிறை

foreign construction-worker-death
Photo: Construction Plus Asia

இந்திய ஊழியரின் காதை கடித்து துப்பிய குற்றத்திற்காக கட்டுமான ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டைச் சேர்ந்த 37 வயதான மனோகர் சங்கருக்கு, இன்று திங்கள்கிழமை (ஜூன் 26) ஐந்து மாத சிறைத்தண்டனையும் S$1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

“Singapore Pools குலுக்கலில் முதல் பரிசு வேணுமா? அப்போ இத செய்” – பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… சுதாரித்த நபர்

என்ன நடந்தது?

தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியது மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

இதில் பாதிக்கப்பட்ட 47 வயதான இந்திய நாட்டவருடன் சங்கர் ஒன்றாக தங்கி இருந்துள்ளார்.

இருவரும் அப்பர் செராங்கூன் சாலையில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மே 19 அன்று இரவு அவரின் அபார்ட்மெண்டில் சங்கர் மது அருந்திக் கொண்டிருந்தார். பாதிக்கப்பட்டவரும் உடன் இருந்தார்.

மது போதையில் இருந்த சங்கர் கொச்சையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டவரை திட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சக ஊழியர், திட்டுவதை நிறுத்துமாறு சங்கரிடம் கூறினார்.

ஆனால், அதனை பொருட்படுத்தாத சங்கர், சக ஊழியரின் காது மடலைக் கடித்து துப்பியதாக சொல்லப்பட்டுள்ளது.

சுமார் 2 செமீ அளவுக்கு காது பகுதியை சங்கர் கடித்துத் துப்பியதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சங்கருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி அச்சம் வேண்டாம் – “தைரியமாக செய்யுங்கள்.. உயிரை காப்பற்றுங்கள்” – ரகசியம் காக்கப்படும் என உறுதி