இந்தியருக்கு சிறை, ஆறு பிரம்படிகள்.. சிங்கப்பூரில் இளம் பெண்ணை தூக்கிச்சென்று மானபங்கம் செய்த கொடூரம்

Indian national jailed caning molest drunk
Unsplash

சிங்கப்பூரில் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று மானபங்கம் செய்த இந்தியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகத்தில் இருந்த பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று புல்வெளி பகுதியில் வைத்து மானபங்கம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணைதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு

21 வயது மிக்க அந்த இளம் பெண் புல்வெளியில் அரைகுறை ஆடையுடன் கிடப்பதை அவருடைய நண்பர்கள் கண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, 25 வயதான எருகுலா ஈஸ்வர ரெட்டி என்ற இந்திய நாட்டவர் தாம் செய்த பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

என்ன நடந்தது?

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20, அன்று நடந்த இந்த சம்பவத்தில், அந்த பெண் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார்.

கிட்டத்தட்ட இரவு 11 மணி ஆனதும், அவர்கள் டர்ஃப் கிளப் சாலையில் அமைந்துள்ள ஃபெஸ்டிவோ @ மிஸ்டர் கேலோப் என்ற உணவகத்திற்கு சென்றனர்.

அப்போது, இளம் பெண் சோர்வாக இருந்தார் என்றும், ஆனால் அவரால் நடக்க முடிந்ததாகவும் மேலும் சுற்றியுள்ளவற்றை அறியும் அளவிற்கு தெளிவாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தனக்கு உதவி வேண்டாம் என நிராகரித்த போதும், எருகுலா பாதிக்கப்பட்டவரை நாற்காலியில் இருந்து நேருக்கு நேர் பிடித்து தூக்கி, உணவகத்திற்கு வெளியே இழுத்துச் சென்றுள்ளார்.

அதாவது அருகிலுள்ள புல்வெளிக்கு அவரை கொண்டு சென்று, பின்னர் ஆடவர் அவரின் ஆடைகளை கழற்றி பெண்ணை மானபங்கம் செய்தார் என சொல்லப்பட்டுள்ளது.

எருகுலா தூக்கிச் செல்வதற்கு முன், அந்த பெண் உதவி வேண்டி தனது நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

இதனை அடுத்து, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரின் நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது எருகுலா நிர்வாணமாகவும் கையும் களவுமாகவும் பிடிக்கப்பட்டார்.

அழுதுகொண்டே இருந்த பெண்ணின் முகத்தை நிமிர்த்தி பார்த்தபோது, அவர் அரைகுறை ஆடையுடன் படுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பின்னர், பெண்ணின் தோழி போலீசை அழைத்தார், விரைந்து வந்த அவர்கள் எருகுலாவை கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று ஜன. 19, அன்று, எருகுலா பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இறுதியாக, எருகுலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படியும் விதிக்கப்பட்டன.

#Trending: சிங்கப்பூரில் நீண்டகாலம் பணிபுரிந்த “வெளிநாட்டு ஊழியருக்கு இப்படி தான் மரியாதையை செலுத்தணும்” – மாஸ் முதலாளி