#Trending: சிங்கப்பூரில் நீண்டகாலம் பணிபுரிந்த “வெளிநாட்டு ஊழியருக்கு இப்படி தான் மரியாதையை செலுத்தணும்” – மாஸ் முதலாளி

migrant-worker-retiree-emotional-party trending
hm_imran_786/TikTok

சிங்கப்பூரில் நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாக பணிபுரிந்த வெளிநாட்டு ஊழியருக்கு அந்நிறுவனம் இதயம் கனிந்த பிரியாவிடை கொடுத்த காணொளிகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.

அந்த நிறுவனத்தை “சிறந்த முன்மாதிரி” என பாராட்டிய நெட்டிசன்கள், ஊழியரின் கடின உழைப்பையும் பாராட்டினர்.

விமானத்தின் கழிவறையில் சிக்கி கொண்ட இந்திய பயணி.. பயணம் முழுவதும் சிக்கி தவித்த பரிதாபம்

சோனா மியா என்று அழைக்கப்படும் பங்களாதேஷில் இருந்து வந்த புலம்பெயர்ந்த ஊழியருக்கு தான் அந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அவர் தன்னுடைய சக ஊழியரை கட்டிப் பிடித்துக் கொண்டு அவரது கண்ணீரைத் துடைப்பதையும் அந்த காணொளியில் காணலாம்.

சக ஊழியர், திரு சோனாவின் தோளில் தட்டிக்கொடுத்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

ஷுன் யி செங் காண்ட்ராக்ட் இன்ஜினியரிங் (SYC) என்ற அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஹோசன் எம்டி இம்ரான் என்ற ஊழியர் செவ்வாயன்று (ஜனவரி 16) இந்த காணொளியை வெளியிட்டார்.

திரு சோனா நிறுவனத்தின் “மிக மூத்த ஊழியர்” என்றும் அவர் சிங்கப்பூரில் பணியாற்றிய 32 ஆண்டுகளில் 27 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் அவர் கூறினார்.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு இவ்வாறு தான் மரியாதை செலுத்தவேண்டும். அந்த நிறுவனத்திற்கும் முதலாளிக்கும் வாழ்த்துக்கள்” என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

அந்த நிறுவனத்தை மற்ற நிறுவனங்களுக்கு சிறந்த ஒரு முன்மாதிரி என நெட்டிசன்கள் பலர் பாராட்டினர்.

Video: https://www.tiktok.com/music/original-sound-7324630222865795842?refer=embed

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வாடகை, உயரும் செலவுகள்.. கடைகளை காலி செய்யும் வியாபாரிகள்