இந்திய மற்றும் தமிழ் புத்தாண்டு- சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ‘Lisha’!

Photo: Lisha Official Website

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (Little India Shopkeepers And Heritage Association- ‘Lisha’) இணைந்த அமைப்பான ‘Lisha’ தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட அனைத்து விதமான பண்டிகைகளையும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது.

சோவா சூ காங் லூப்பில் கடைசியாக காணப்பட்ட 19 வயது ஆடவர் – கோரிக்கை வைக்கும் காவல்துறை

வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டும், தங்கள் குடும்பத்தினருடன் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், வரவிருக்க தமிழ் புத்தாண்டையொட்டி, ‘Lisha’ பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, ‘Lisha’ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்திய மற்றும் தமிழ் புத்தாண்டை மீண்டும் கொண்டாட வேண்டிய தருணம் இது. சிங்கப்பூரில் வசிக்கும் முக்கிய நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களில் இந்தியர்களும் ஒன்று. சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்றாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களவைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன.

தண்டனை காலம் முடிந்தாலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வரை சிறை!

சிங்கப்பூரில் உள்ள புள்ளியியல் துறையின் படி, தமிழர்கள் தவிர, அஸ்ஸாம் (Assam), பெங்காலி (Bengali), சிலோன் தமிழ் (Ceylon Tamil), குஜராத்தி (Gujarati), இந்தி (Hindi), இந்திய முஸ்லிம்கள் (Indian Muslims), இந்திய பெரனாகன் (Indian Peranakan), கன்னடம் (Kannada), மகாராஷ்டிரா (Maharashtra), மலையாளி (Malayalee), மார்வாரி (Marwari), பஞ்சாபி (Punjabi), சிந்தி (Sindhi), தெலுங்கு (Telugu) உள்ளிட்ட பல்வேறு மொழி பேசும் மக்களும், இங்கு வசித்து வருகின்றனர்.

தமிழ் நாட்காட்டியின் படி, தமிழ் புத்தாண்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று வருகிறது. ஏறக்குறைய மற்ற அனைத்து இந்திய மக்களும் அதே காலகட்டத்தில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன.

‘Lisha’ அனைத்து இந்திய மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க விரும்புகிறது மற்றும் தமிழில் மட்டும் கவனம் செலுத்தாமல், இந்த இந்திய புத்தாண்டு (Indian and Tamil New Year- ‘INY’) நிகழ்வை நாங்கள் கொண்டாடுகிறோம். இந்திய புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த புத்தாண்டைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது, சிங்கப்பூரில் உள்ள அனைத்து இந்திய மக்களிடையே புரிதல் மற்றும் ஒற்றுமையை மேலும் வளர்ப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

கிராஞ்சி போர் நினைவுச் சின்னத்தில் இந்திய ராணுவ தளபதி மலர்வளையம் வைத்து அஞ்சலி!

‘Lisha’ ஏற்பாடு செய்துள்ள இந்திய மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க https://www.littleindia.com.sg/ என்ற ‘Lisha’- வின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம். இதற்கான இணையதளப் பதிவும் தொடங்கியுள்ளது.