சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய வம்சாவளிக்கு சிறைத் தண்டனை!

Domestic helper jailed spore
PHOTO: Yahoo News Singapore

 

சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் (Changi Airport Group- ‘CAG’) இந்திய வம்சாவளியான பிரேம் குமார் (வயது 41) பணியாற்றி வந்துள்ளார். இவரது பணி விமான நிலையத்திற்குள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வழங்குவது ஆகும். கடந்த 2015- ஆம் ஆண்டு அக்டோபர் 6- ஆம் தேதி முதல் 2017- ஆம் ஆண்டு டிசம்பர் 25- ஆம் தேதி வரை பணியாற்றிய அவர், லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதி இல்லாத நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

மேலும், பல்வேறு நபர்களிடம் இருந்து 4,400 வெள்ளியை லஞ்சமாக அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிரேம் குமார் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டதால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு 3 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானம்…..பயணிக்கு தேள் கடி!

7,500 வெள்ளி அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக, 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.