போலீஸ் அதிகாரியை தாக்கிய இந்திய வம்சாவளி ஆடவர் கைது

indian-origin-man charged singapore

கைது செய்வதற்காக வந்த போலீஸ் அதிகாரியை தாக்கியதாக 49 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 23 அன்று செம்பவாங் டிரைவ் கார்பார்க்கில் 22 வயதான அதிகாரியின் வலது கை மற்றும் இடுப்பை உதைத்ததாக ஹரிதாஸ் ரியான் பீட்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் முழுவதும் அதிரடி சோதனை.. 68 பேர் கைது

இந்நிலையில், பொது ஊழியரைத் தாக்கியதாக ஹரிதாஸ் மீது நேற்று வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு முன்பாக, அடுக்குமாடி குடியிருப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஹரிதாஸ் தனது காதலியுடன் அங்குள்ள அடுக்குமாடி வீட்டில் தங்கி இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் தனக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதால், அங்கு நெருக்கடி பேச்சுவார்த்தை பிரிவு (CNU), சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் அதிகாரிகளும் இருந்தனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது அவர் காதலி கழிவறைக்குச் சென்றதைக் அதிகாரிகள் கண்டனர்.

இதனை அடுத்து, ​​​​அதிகாரிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டபோது அதிகாரியை தாக்கியதாக சொல்லப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்பபடி விதிக்கப்படலாம்.

அவரது வழக்கு பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தில் எலி, கரப்பான்.. அதிரடி ஆய்வு – உரிமம் தற்காலிகமாக ரத்து