சிங்கப்பூர் முழுவதும் அதிரடி சோதனை.. 68 பேர் கைது

Pexels

சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 68 சந்தேக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜன.21 முதல் ஜன.26 வரை நடந்த இந்த அதிரடி சோதனையில் போதைப்பொருள் தொடர்பான சந்தேக அடிப்படையில் அவர்கள் பிடிபட்டனர்.

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தில் எலி, கரப்பான்.. அதிரடி ஆய்வு – உரிமம் தற்காலிகமாக ரத்து

அதில் மிக குறைந்த வயதுடைய நபராக 15 வயதுமிக்க சிறுவரும் பிடிபட்டதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (CNB) கூறியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் தற்போதைய மதிப்பு S$63,000 என கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக பல வகையான போதைப்பொருட்களும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைகள் நடந்து வருகிறது.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, 15 கிராமுக்கு அதிகமான diamorphine அல்லது அபின் கடத்திய குற்றம் நிரூபணமானால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தில் எலி, கரப்பான்.. அதிரடி ஆய்வு – உரிமம் தற்காலிகமாக ரத்து