லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தில் எலி, கரப்பான்.. அதிரடி ஆய்வு – உரிமம் தற்காலிகமாக ரத்து

al-mustafa-restaurant-in-little-india-suspended
Google Map

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

எலி மற்றும் கரப்பான் பூச்சிகள் காணப்பட்டதை அடுத்து, 11 லெம்பு சாலையில் அமைந்துள்ள அல்-முஸ்தபா உணவகத்தின் உரிமம் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு

அதாவது ஜனவரி 23 முதல் பிப்ரவரி 5 வரை உணவகம் செயல்படாது என சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.

SFA மேற்கொண்ட வழக்கமான ஆய்வில், உணவுப் பாதுகாப்புத் தரங்களில் குறைபாடு மற்றும் பல விதி மீறல்கள் கண்டறியப்பட்டது.

மேலும் அந்த ஆய்வின் போது உணவகத்தில் எலி மற்றும் கரப்பான் பூச்சிகளை அதன் அதிகாரிகள் கண்டதாக கூறினர்.

உரிமையாளர் கடையை சுத்தமாக வைத்திருக்கத் தவறியதாகவும், அதில் உணவு தயாரிக்கும் இடமும் அடங்கும் என்றும் SFA மேலும் கூறியது.

உணவகம் 12 மாத காலத்திற்குள் 16 குற்றப் புள்ளிகளைப் பெற்றுள்ளது, இதன் காரணமாக கடைக்கு மொத்தம் S$1,100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு

சிங்கப்பூரின் “O வகை இரத்தம்” தேவை – நன்கொடையாளர்கள் முன்வருமாறு வேண்டுகோள்