30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு

Singapore 30-day visa-free entry China

சிங்கப்பூர்: 30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம் என சிங்கப்பூர் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.

இந்த திட்டம் முதலில் இரண்டு மாதங்களுக்குப் முன்னர் அறிவிக்கப்பட்டது.

பணத்துக்காக வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டவருக்கு சிறை

இந்நிலையில், இரு தரப்பு முக்கிய அரசாங்கப் பிரதிநிதிகளும் இன்று வியாழக்கிழமை (ஜனவரி 25) அந்த பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சீனப் புத்தாண்டுக்கு முன்னதாக பிப்ரவரி 9 அன்று இந்த ஏற்பாடு முறையாக அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடு இரு நாட்டு சுற்றுலா பணிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் சிங்கப்பூரர்கள் மற்றும் சீன குடிமக்கள் வணிகம் தொடர்பாக, சுற்றிப்பார்க்க, நண்பர்களை சந்திக்க மற்றும் குடும்பத்தினரை பார்க்க பரஸ்பர பயணங்களை மேற்கொள்ள முடியும்.

லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு