பணத்துக்காக வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டவருக்கு சிறை

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

வெளிநாட்டு பெண்ணை பணத்துக்காக வேண்டி திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூர் ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபான கூடத்தில் சந்தித்த ஜேன் என்ற அந்த பெண்ணை S$3,000 பணத்துக்காக திருமணம் செய்துகொண்டார் என கூறப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு

அதை கொண்டு தனது கடனை அடைத்து விடலாம் என்றும், தனது முதல் திருமணத்தில் பெற்ற குழந்தைகளைப் பராமரிக்கலாம் எனவும் அவர் எண்ணினார்.

ஜேன், நீண்ட கால பயண அனுமதியைப் பெற சிங்கப்பூர் ஆடவரை திருமணம் செய்துகொள்ள இருந்தார், ஆகவே இருவருக்கும் ஒத்துப்போனது.

இந்நிலையில், 33 வயதான முகம்மது பவுசி கஹிர் என்ற அந்த ஆடவருக்கு இன்று (ஜனவரி 25) ஆறு மாத சிறைத்தண்டனையும் S$3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத்தை செலுத்த முடியாவிட்டால், கூடுதலாக 10 நாட்கள் சிறைத்தண்டனை அவர் அனுபவிக்க வேண்டும்.

இந்த திருமணம் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு நவம்பரில் அவர் கைதானார்.

அந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.

பழுதடைந்த மின் சாதனங்கள், உடமைகளை இலவசமாக சரிசெய்து கொள்ளலாம் – செராங்கூன் உள்ளிட்ட 10 இடங்களில்..