சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ஆடவர்: குற்றமற்றவர் என அதிரடி தீர்ப்பு

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ஆடவர், தற்போது குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்காக 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் 39 வயதான புனிதன் கணேசன் என்ற இந்திய வம்சாவளி மலேசியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இனி வரிசையில் நிற்கவேண்டியதில்லை: மருத்துவமனைகளில் முகங்களை ஸ்கேன் செய்யும் புதிய முறை

இந்நிலையில், சிங்கப்பூரின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (அக்.31) அவரை விடுவித்தது, அரசுத் தரப்பு இந்த வழக்கை நிரூபிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

2011 அக்டோபர், சிங்கப்பூரிலுள்ள வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் புனிதன் கணேசன் மற்ற இருவருடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.

மற்ற இருவர் சண்முக வேலு மற்றும் முகம்மது சுஹிப் ஆகியோர் ஆவர். மலேசியரான சண்முகத்தை சுகிப்புக்கு கணேசன் அறிமுகப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் ஒன்றாக சந்தித்தாக கூறப்பட்ட வாதத்திற்கு ஆதாரம் இல்லை என்று இந்த வழக்கில் இருந்து கணேசன் விடுவிக்கப்பட்டார்.

அதே போல, இந்த விடுவிப்புக்கும் சண்முகம் மற்றும் சுகிப்பின் வழக்குக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இடிந்து விழுந்த தொங்கு பாலம்… 140 க்கும் மேற்பட்டோர் பலி – பதைபதைக்கும் CCTV காட்சி