ஊழியர் ஒருவரை அடித்து தாடையை உடைத்த இந்திய வம்சாவளி ஊழியருக்கு சிறை

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர் ஒருவருக்கு கடந்த மே 18 புதன்கிழமை அன்று 21 மாதங்கள் மற்றும் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரியைத் வேண்டுமென்றே தாக்கியது மற்றும் இனவெறிக் கருத்துக்களை பயன்படுத்தியது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

ஒருவரை தாக்கும்போது படம்பிடித்த மற்றொரு ஆடவரை தாக்கிய சிவகார்த்திக்குக்கு சிறை

43 வயதான சஞ்சீவன் மகா லிங்கம் என்ற அவர், தனது பிறந்தநாளில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று, குப்பை சேகரிக்கும் நிலை­யத்­தில் உறங்கிக் கொண்டிருந்த துப்புரவு ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை குத்தியதில், ஊழியரின் தாடை உடைந்தது.

சஞ்சீவன் குற்றமிழைத்த அந்த சமயத்தில் பணிபுரிந்தாரா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், அவர் மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

Singapore Pools கடையில் லாட்டரி டிக்கெட் வாங்க சென்றபோது வாக்குவாதம்… மரணத்தில் முடிந்த சண்டை