மது போதையில் பேருந்து ஓட்டுநர், போலீசிடம் ரகளை – இந்தியருக்கு சிறை

Repeat offender jailed

கடந்த ஆண்டு பிற்பகுதியில் குடிபோதையில் மற்றவர்களை தொந்தரவு செய்ததற்காக ஆடவர் ஒருவருக்கு S$1,000 அபராதம் விதிக்கப்பட்டது, அதை தொடர்ந்து அவர் மீது மீண்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெவ்வேறு சம்பவங்களில், அவர் குடிபோதையில் போலீஸ் அதிகாரி மற்றும் பேருந்து ஓட்டுனரை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

முகக்கவசம் அணியச் சொன்னது குத்தமா? – பேருந்து ஓட்டுனரை அடித்து தாக்கிய இருவர் (காணொளி)

தற்போது 65 வயதாகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூர்த்தி நாகப்பன், மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் பொது இடத்தில் குடிபோதையில் மற்றவர்களுக்கு தொல்லை தந்த குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அவருக்கு ஐந்து வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் துப்புரவுத் ஊழியரான அவர், இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இரவு 7 மணியளவில் லிட்டில் இந்தியாவிலுள்ள தேக்கா மார்க்கெட் அருகே பேருந்தில் ஏறியபோது குடிபோதையில் இருந்துள்ளார்.

மேலும் அவர் முகக்கவசத்தையும் சரியாக அணியாமலும் இருந்துள்ளார். இதனை அடுத்து, அதனை சரியாக அணியுமாறு ஓட்டுநர் நினைவூட்டியபோது, ​​அதிருப்தி அடைந்து மூர்த்தி, 33 வயதுடைய ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அடுத்து என்ன நடந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை, ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 29 அன்று தேக்கா மார்க்கெட் அருகே மூர்த்தி மீண்டும் குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மதியம் 1 மணியளவில் அவர், அவ்வழியாகச் செல்பவர்கள் மீது அநாகரீகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார், அதனை கண்டு காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் காவல்துறை அங்கு வந்தபோது, அதிகாரி ஒருவரை தகாத முறையில் பேசியுள்ளார், பின்னர் அவர் மேலும் ஆத்திரமடைந்து காவல்துறை அதிகாரியை கடுஞ்சொற்களால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதனை அடுத்து மூர்த்தி கைது செய்யப்பட்டார்.

சாலைத் தடைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகரிக்கும் சிறைத்தண்டனை, அபராதம்