இந்தியப் பெண்ணை மார்பில் எட்டி உதைத்து, இன ரீதியாக கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் நபர்

இந்தியப் பெண்ணை மார்பில் எட்டி உதைத்து, இன ரீதியாக கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் நபர்
(Photo: Reuters)

முகக்கவசம் சரியாக அணிய சொல்லி இந்திய வம்சாவளி பெண் ஒருவரின் மார்பில் எட்டி உதைத்து, இன ரீதியாக கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தியதாக ஆடவர் ஒருவர் மீது அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு சுவா சூ காங்கில் இந்த சம்பவம் நடந்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வம்சாவளி பெண் ஹிந்தோசா நிதா விஷ்ணுபாய் இந்த தாக்குதலில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

57 வயதான அவர், தற்போது 32 வயதான வோங் ஜிங் ஃபோங் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பேசினார்.

வெளிநாட்டு ஊழியர் லாரி, டாக்ஸி, கார் என 6 வாகனங்கள் மோதி விபத்து: தீப்பற்றி எரிந்த கார் – ஐந்து பேர் மருத்துவமனையில்..

வேலைக்கு செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்ய நேரமில்லாததால், நடைப்பயிற்சி செய்ய வேகமாக நடந்து சென்றதாகவும், மேலும் சுதந்திரமாக சுவாசிக்க முகக்கவசத்தை கீழே சற்று இழுத்ததாகவும் ஹிந்தோசா கூறினார்.

அந்த நேரத்தில் இருந்த சிங்கப்பூரின் COVID-19 விதிமுறைகளின்படி, உடற்பயிற்சி செய்பவர்களை தவிர அனைவரும் முகக்கசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

அந்த நேரத்தில் ஹிந்தோசாவை நோக்கி நடந்து வந்த வோங், முகக்கவசம் அணியச்சொல்லி அவர் மீது இன ரீதியாக கொச்சை வார்த்தைகளை அள்ளி வீசியதாக அவர் கூறினார்.

“எனக்கு சண்டை போட பிடிக்காது சார், அதனால் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று ஹிந்தோசா கூறியுள்ளார். பின்னர் வாங் அவரை நோக்கி ஓடி வந்து மார்பில் உதைந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் ஹிண்டோசா பின்புறம் கீழே விழுந்ததில், அவரின் இடது முன்கை மற்றும் உள்ளங்கையில் இரத்தப்போக்கு ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை வோங் மறுத்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்