சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை

சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களில் ஏதேனும் ஒன்றில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு கட்டணமாக S$10.80 நீங்கள் செலுத்த வேண்டும்.

அதற்கான விண்ணப்ப படிவத்தை www.hcisingapore.gov.in என்னும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தூதரகம் அல்லது பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, passport.singapore@mea.gov.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை (அடையாளம் / புகைப்படம் சரிபார்க்கப்பட வேண்டும்) சமர்ப்பிக்க விண்ணப்பதாரர் நேரில் வர வேண்டும்.

உங்களிடம் தற்போதுள்ள (காலாவதியான) இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு வர வேண்டும்.

சமீபத்தில் நீங்கள் எடுத்த வண்ண புகைப்படம் (அளவு 2 inch X 2 inch) (5.1 X 5.1 cm) வெள்ளை நிற பின்னணியுடன், கடந்த 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

NRIC / EP / SP / DP / WP போன்ற அடையாள அட்டை மற்றும் அந்த ஆவணங்களின் நகல்கள்.

சிறுவர்களுக்கு பாஸ்போர்ட்களை புதுப்பிக்க, பெற்றோரின் பாஸ்போர்ட்களின் நகல்களும் சமர்ப்பிக்கலாம்.

இதற்கான கட்டணம்:

36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டிற்கு S$100.00 செலுத்த வேண்டும்.

15 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு S$65.

60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் கையேட்டிற்கு S$130.00 ரொக்கமாக செலுத்தப்பட வேண்டும்.

இதற்கான செயல்முறை நேரம்:

பொதுவாக 5 முதல் 8 வேலை நாட்கள்

விண்ணப்பிக்க வேண்டிய இடம்:

அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்கள்.

பாஸ்போர்ட் வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் அவசர சேவைகள் (தட்கல் சேவா):

பாஸ்போர்ட் விண்ணப்பதாரருக்கு எதிராக எந்த தடையும் இல்லாத பட்சத்தில், உண்மையாக அவசரம் இருக்கும் பட்சத்தில், அடுத்த நாள் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்க இந்த சேவை உதவுகிறது.

கட்டணம்:

சாதாரண பாஸ்போர்ட்டுக்கு S$285.00, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு S$255 மற்றும் ஜம்போ பாஸ்போர்ட்டுக்கு S$320 ரொக்கமாக செலுத்தப்படவேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இடம்:

அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்கள்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.