இந்தியர்கள் என்றால் ‘தமிழர்கள்’ தான் : சிங்கப்பூர் அரசியலில் வேரூன்றி இருந்த தமிழ்குடியின் பின்னணி!

singapore tamil

60களில் சிங்கப்பூரில் பல இந்தியர்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக இருந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தனர் என்கிறார் எழுத்தாளர் செம்மல் விருது பெற்ற மா.கோ அவர்கள்.

அப்போது இந்தியர்கள் என்றால் ‘தமிழர்கள்’ என்று பொருள். ஆனால் சில மலையாளி, சீக்கியர்களும் தமிழர்களாகத்தான் கருதப்பட்டனர்.

சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டு அமைச்சர், சட்ட அமைச்சர், பண்பாட்டு அமைச்சர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான் (அமரர் இராஜரெத்தினம், செயகுமார், கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் பொன்றோர்) திறமையின் பேரில் நியமிக்கப்பட்டார்கள்.

சிறு எண்ணிக்கையிலான இந்தியர்கள் (தமிழர்கள்) அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களாகவும், ஆளுங்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரு தருமண் மிகப் புகழ்பெற்ற, மக்கள் விரும்பும் மூத்த அமைச்சர். ஒருசாரார் இவரை அடுத்த பிரதமாராகவேண்டும் என்று விரும்பினர்.

சட்ட அமைச்சர், உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சருமான திரு க சண்முகம் மிகச்சிறந்த தமிழறிந்த அமைச்சர். திரு ஈசுவரனும் (தொழில், வணிகம் சார்ந்த அமைச்சர்) மிக அழகானத் தமிழில் பேசுவார்.

இந்த அமைச்சர்களுக்கு எல்லா இனமக்களும் சமம். இவர்களுள் யாரும் தமிழர்களுக்கென்று பணியாற்றுவதில்லை. அதைப்போல மற்ற இன நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களையும் ஒதுக்குவதில்லை.

திரு விக்ரம் நாயர் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு மலையாளியாக இருந்தாலும் ஒரளவு தமிழில் பேசுவார்.

இவர் தமிழ் வானொலி, செய்தி போன்ற தமிழ்ப் பிரிவுகள் சிலவற்றுக்கு ஆலோசகரகாவும், தமிழ் மொழி வளர்ச்சிக் குழுவிற்கு (TLLPC) தலைவராகவும் இருக்கிறார். இக்குழுதான் ஆண்டுக்கொருமுறை-ஒரு மாதம் முழுதும் தமிழ்மொழி விழா கொண்டாடுகிறது.

இவரையும் சேர்த்து மூன்று மலையாள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

ஓரிருவரைத்தவிர, பெரும்பாலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மனைவிகள் இந்தியர்கள் அல்ல.

இனி எதிர்காலத்தில் தமிழர்கள் அரசியலில் பங்கெடுக்க வழியில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அறிந்த அல்லது இந்திய புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டிக்கு நிற்கவில்லை.

சிங்கப்பூர் பல இனம் வாழும் நாடு – ஏறக்குறைய சீனர்கள் 75%; மலாய்க்காரர்கள் 15%; இந்தியர்கள் 10%; – (இந்தியர்களுள் தமிழர்கள் 5.4%) வாழ்கின்றனர். தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, 1990ல் 6.5%.

உண்மையில், தற்போதும் எதிர்காலத்திலும் சிங்கப்பூருக்குத் தமிழர் அல்லது இந்தியர் அமைச்சர்கள் தேவையில்லை. சீன, மலாய் இன அமைச்சர்களும் சிங்கப்பூர் மக்களை இன, மொழி, மத வேறுபாடின்றிப் பாதுகாப்பர்.