அளவுக்கு மீறி பயண உடமைகளை ஏற்ற மறுத்த சிங்கப்பூர் ஓட்டுநர்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய சுற்றுலா குழு..!

Indian tourists harass Singapore tour bus driver for refusing to overload vehicle (Photo : The independent)

தனது வாகனத்தில் அதிக சுமை மறுத்துவிட்டதாக கூறி, வட இந்திய சுற்றுலாப் பயணிகளின் குழு, சிங்கப்பூர் டூர் பஸ் ஓட்டுனரிடம் அடாவடித்தனத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

லிட்டில் இந்தியாவில் முஸ்தபா சென்டர் அருகில் அமைந்துள்ள நான்கு நட்சத்திர ஹோட்டலான கிச்சனர் சாலையில் உள்ள ஹோட்டல் பார்க் ராயலில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க : புத்தாண்டு அன்று இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு; பரிதவித்த சிங்கப்பூர் பயணிகள்..!

நேற்று (ஜனவரி 2) பிற்பகல் இந்த வீடியோவை, “ஆல் சிங்கப்பூர் ஸ்டஃப்” முகநூல் பக்கம் சமூக ஊடகங்களில் பதிவேற்றியது, கூடுதல் பொருட்கள் மற்றும் ஒரு சக்கர நாற்காலியை ஏற்ற மறுத்ததால் அந்த சுற்றுலாப் பயணிகள் பெண் ஓட்டுநரை துப்புறுத்த தொடங்கியதாக கூறியுள்ளது.

அந்த முகநூல் பக்கம் கூறியது: “13 இருக்கைகளில் கூடுதல் சாமான்களை ஏற்ற மறுத்ததற்காக சுற்றுலா குழு சிங்கப்பூர் டிரைவரரிடம் அடாவடித்தனம் செய்தது… பின்னர் அவர்கள் உடமைகளின் மேலே வைக்க மற்றொரு சக்கர நாற்காலியைக் கொண்டு வந்தார்கள்… ஆனால் திடீர் பிரேக்கின் போது உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஆபத்தானது என்பதால் டிரைவர் அதையும் மறுத்துவிட்டார் (sic)… ஆனால் குடும்பத்தினர் (sic) ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.”

Tour bus baggage load argument

<Reader's Contribution by Lim>Singapore driver bullied by Tour Group for refusing load extra luggage on 13 seater … then they brought another wheel chair to put on top of luggage … driver refused as it is dangerous for passengers sitting inside due to sudden brake can drop.. but family started shouting at driver. This what's happened..

Posted by All Singapore Stuff on Wednesday, January 1, 2020

அந்த காணொளியில் சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான, ஒரு நடுத்தர வயதுப் பெண், ஓட்டுநரிடம் “எங்களை பதிவு செய்வதன் மூலம் எங்களை பயமுறுத்த முடியாது” என்று மிரட்டுவதை காணலாம்.