புத்தாண்டு அன்று இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு; பரிதவித்த சிங்கப்பூர் பயணிகள்..!

IndiGo flight to Singapore diverted to Nagpur : புத்தாண்டு தினத்தில் சிங்கப்பூருக்கு செல்ல இருந்த இண்டிகோ விமானம் எண்ணெய் கசிவு காரணமாக நாக்பூர் திருப்பி விடப்பட்டது.

இந்த ஆண்டின் முதல்நாளில் (ஜனவரி 1) புதன்கிழமை, மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ விமானம் எண்ணெய் கசிந்ததாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் ஸ்கூட் விமானம் தாமதம்..!

பிராட் மற்றும் விட்னி எஞ்சின் பொருத்தப்பட்ட ஏர்பஸ் 320நியோ (Airbus 320neo) விமானம், மும்பையில் இருந்து அதிகாலை 2.12-க்கு புறப்பட்ட சுமார் 45 நிமிடங்களில் நாக்பூரில் தரையிறங்கியது.

இண்டிகோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “இந்த விமானம் நாக்பூரில் தொழில்நுட்ப ஆய்வுக்காக தரையிறக்கப்பட்டது” என்றார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியின் பக்தி இசை நிகழ்ச்சி..!

இதனை தொடர்ந்து, “ஹைதராபாத்தில் இருந்து மற்றொரு விமானம் கொண்டு வரப்பட்டது, பிறகு பயணிகள் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.