இந்திய ஊழியர் விபத்தில் சிக்கி மரணம்; சிங்கப்பூரில் தொடரும் வேலையிட இறப்புகள்

jail-caning-worker-sex-assaulted-maid
Roslan Rahman/AFP

கீயட் ஹாங் லிங்கில் (Keat Hong Link) உள்ள வீட்டுவசதி கழக திட்ட தளத்தில் 35 வயதான ஊழியர் ஒருவர் ஃபோர்க்லிஃப்ட் இயந்திர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று (ஜூலை 7) நடந்த இந்த சம்பவத்துடன், இந்த ஆண்டு வேலையிட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை 29ஆக உயர்ந்துள்ளது.

ஊழியர்களுக்கு இந்த ஆதரவு கண்டிப்பாக வேண்டும் – 3 முக்கிய அம்சங்கள்

உயிரிழந்த ஊழியர் இந்திய நாட்டை சேர்ந்தவர், ஃபோர்க்லிஃப்ட்டின் நின்று கொண்டிருந்த அவர் விபத்தில் சிக்கியதாக சொல்லப்படுகிறது.

மேற்கூரை பீம் இரும்பில் கேபிளைக் கட்டிக்கொண்டிருந்தபோது ஃபோர்க்லிஃப்ட் இயந்திரம் திடீரென பின்னோக்கி நகர்ந்ததில் இந்த சம்பவம் நடத்ததாக கூறப்படுகிறது.

அதாவது அவர் ஃபோர்க்லிஃப்ட்டின் மேல் அமைப்பிற்கும் பீம் இரும்புக்கும் இடையில் சிக்கியதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வெள்ளிக்கிழமை CNA தளத்திடம் கூறியுள்ளது.

இதனை அடுத்து அவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

ஊழியர், Mega Engineering நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் விமான டிக்கெட் பதிவு செய்யும் போது நடக்கும் மோசடி – வெளிநாட்டு பணியாளர்களுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!