நண்பர் மீது லாரியை ஏற்றி, தரதரவென சாலையில் இழுத்துச்சென்ற வெளிநாட்டு ஊழியர் – போதையில் நடந்த விபரீதம்

6-bangladeshi-nationals-arrested-for-gang-robbery-
(Photo: TODAY)

தரையில் படுத்திருந்த நண்பர் மீது லாரியை ஓட்டி, இழுத்துச் சென்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 சர்க்யூட் பிரேக்கர் நடப்பில் இருந்தபோது, ​​அத்தியாவசியமற்ற வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்லத் தடை இருந்தது. ​​​​

Work Permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR, குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன்? ஒதுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்.. அடுக்கடுக்கான கேள்விகள்

அப்போது, இரண்டு ஆடவர்கள் மது அருந்துவதற்காக நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

பின்னர், போதை தலைக்கு ஏறியதில் அவர்கள் ஒரு கார் நிறுத்துமிடத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர், அதன் பின்னர் அவர்களில் ஒருவர் சாலையில் படுத்துள்ளார்.

அதனை அடுத்து, கே பிரதீப் ராம் என்ற அந்த ஊழியர் தரையில் படுத்திருந்த நண்பர் பிரவின் குமார் சுப்ரமணியம் மீது லாரியை நேரடியாக ஏற்றினார்.

இதனால் அவரின் சட்டைகள் லாரியில் சிக்கிக்கொண்டன, லாரியை தொடர்ந்து இயக்கியதால் அவர் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்.

பின்னர் அதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

இதில் அவருக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன, பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

41 வயதான லாரி ஓட்டுநரான கே பிரதீப் ராமுக்கு நேற்று (ஆகஸ்ட் 16) 21 மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனையும், S$5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் 10 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் அவருக்கு விதிக்கப்பட்டது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், கோவிட்-19 விதிமுறைகளை மீறுதல் மற்றும் காவல்துறையை ஏசியது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் பற்றாக்குறை… உணவகங்களில் இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி – செப். முதல் விண்ணப்பிக்கலாம்