இந்திய ஊழியர் மீது மோதிய வாகனம்.. தூக்கக் கலக்கம் தான் காரணம்

புற ஊதா
Photo: TODAY

சிங்கப்பூரில் சாலைப் பணிகளைச் செய்து கொண்டிருந்த இந்திய ஊழியர் மீது டாக்ஸி மோதிய சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

64 வயதான ஓங் பூன் லியோங் என்ற டாக்ஸி ஓட்டுநர், 25 வயதான மாதவன் நவீன் குமாருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வேலை அனுமதி சட்டத்தை மீறிய வெளிநாட்டு ஊழியர்: “கூடுதல் வேலை.. அதிக சம்பளம்” – கடும் நடவடிக்கை எடுத்த சிங்கப்பூர்

தண்டனை முடிந்து அவர் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் ஊழியரின் மண்டையில் எலும்பு முறிவு, மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பல காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் சுமார் 100 நாட்களுக்கு மேல் மருத்துவ விடுப்பில் செல்ல வேண்டியிருந்தது.

இந்த சம்பவம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. அப்போது நள்ளிரவு 2 மணிவரை அவர் டாக்ஸியை ஓட்டியதாக கூறப்பட்டுள்ளது.

குயின்ஸ்வே வழியாக போர்ட்டவுன் அவென்யூவை நோக்கி சென்ற அந்த ஓட்டுநர், தூக்கக் கலக்கத்தில் கண் அசந்துள்ளார்.

அப்போது அவ்வழியே ​​சாலைப் பணிகளைச் செய்து கொண்டிருந்த மாதவனை அந்த வாகனம் மோதியது.

இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனமாக இருங்கள், நம்மை நம்பி குடும்பம் இருக்கிறது.

தலைக்கேறிய மது போதை.. வீட்டில் உறங்குவது போல படுத்திருந்த ஆடவர் – போலீசை அழைத்த பொதுமக்கள்