“இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம்” – சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கும் அதிஷ்டம்

Indians free visa entry
Photo: Chennai Airport

இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம் என்ற அறிவிப்பை மேலும் இரு நாடுகள் வெளியிட்டுள்ளன.

தற்போது கென்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லாத இலவச நுழைவை அனுமதித்துள்ளன.

வேலையிடத்தில் மின்னல் தாக்கியதில் 3 கட்டுமான ஊழியர்கள் பாதிப்பு

இதற்கு முன்னர் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் விசா இல்லாத இலவச நுழைவை அறிவித்தன.

இனி இந்திய நாட்டு குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட் மட்டும் வைத்துக்கொண்டு கென்யா மற்றும் ஈரானுக்கு செல்லலாம்.

இந்த ஆண்டு முதல் சுற்றுலா பயணிகளுக்கு கென்யா நுழைய விசா அனுமதி தேவையில்லை என அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூடோ கூறியுள்ளார்.

அதேபோல, சுமார் 33 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பயணிகளுக்கு விசா அனுமதி தேவையில்லை என ஈரான் கூறியுள்ளது.

இதனால் இரு நாட்டின் பொருளாதாரம் பல மடங்கு மேம்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுங்கே உலு பாண்டன் கால்வாயில் மிதந்த சடலம் – யார் அவர்?