‘விடுமுறை நாட்களில் இந்தியர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் செல்வது அதிகரிப்பு’- காரணம் என்ன தெரியுமா?

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

 

பல்வேறு நாடுகளில் விசா கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டதால் விடுமுறையில் அந்நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மலேசியாவில் உடல்நிலை பாதிப்பு….கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ள தமிழக இளைஞர்!

கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வரும் இந்தியர்களுக்கு 30 நாட்களுக்கு விசா கட்டணம் இல்லை என அறிவித்துள்ளனர். குறிப்பாக, சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் இலங்கை வரும் மார்ச் 31- ஆம் தேதி வரை இலவச விசா அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

அதேபோல், தாய்லாந்தும் தங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா கட்டணம் இல்லை என அறிவித்தது. அதன் காரணமாக, இந்நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 13% அதிகரித்துள்ளதாக போக்குவரத்து முன்பதிவு இணையதளமான ‘Cleartrip’ தெரிவித்துள்ளது.

கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் 6 பேர் கைது

விசா கட்டணம் இல்லை என அறிவித்த இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் வந்த விடுமுறை நாட்களில் செல்ல இந்தியர்கள் முன்பதிவுச் செய்தது 49% அதிகரித்திருந்ததாக ‘Cleartrip’ நிறுவனம் தெரிவித்துள்ளது.