பயணிகளின் லக்கேஜ்களை இறக்காமல் வேறு பயணிகளுடன் மீண்டும் இந்தியா பறந்த இண்டிகோ விமானம்

IndiGo flight returns Singapore baggage error
Twitter Page

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் பயணிகளை இறக்கிவிட்டு அவர்களின் லக்கேஜ்களை இறக்கி வைக்காமல் மீண்டும் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

செவ்வாய்க் கிழமை காலை பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சிங்கப்பூக்கே திரும்பியது.

ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற 40 பேர் செய்த சட்டவிரோத செயல்.. சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் – எச்சரிக்கை

சிங்கப்பூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் இண்டிகோ 6E-1006 விமானத்தில் லக்கேஜ் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.

இதன் காரணமாக விமானம் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியது என்றும், இதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூக்கம் இல்லாமல் கடும் அவதியை சந்தித்ததாக சில சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவம் குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

IndiGo நிறுவனத்தை டேக் செய்து, X தளத்தில் பயனர் ஒருவர் கூறியதாவது; “சாத்தியமற்றதைச் செய்து காட்டியதற்கு வாழ்த்துகள்…” என்று காட்டமாக பதிவிட்டார்.

மோசமான நிர்வாகம் என்றும் சிலர் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

20 ஆண்டுகளாக வெளிநாட்டு பணிப்பெண்கள் தான் இலக்கு.. மறைந்து இருந்து மான பங்கம் செய்யும் ஆடவர் – பிடிபட்ட கதை