ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற 40 பேர் செய்த சட்டவிரோத செயல்.. சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் – எச்சரிக்கை

foreign workers singapore job illegal
(Photo: Ministry of Manpower)

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களில் குறைந்தது 40 பேருக்கு கடன் கொடுத்த சந்தேகத்தின்பேரில் 45 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து கடந்த அக். 3 ஆம் தேதி அன்று தகவல் கிடைத்ததாக போலீசார் கூறினர்.

20 ஆண்டுகளாக வெளிநாட்டு பணிப்பெண்கள் தான் இலக்கு.. மறைந்து இருந்து மான பங்கம் செய்யும் ஆடவர் – பிடிபட்ட கதை

பின்னர், மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் நேற்று புதன்கிழமை தெரிவித்தனர்.

இதில் ​​ஒரு மொபைல் போன் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும் அவரின் 2 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அந்த ஆடவர் குறைந்தது 40 வீட்டுப் பணிப்பெண்களுக்கு கடன் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

உரிமம் பெறாத கடனாளிகளிடம் கடன் வாங்கும் ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், அதன் பிறகு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. சட்டவிரோத லாரி சேவைக்கு குட்பை