வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. சட்டவிரோத லாரி சேவைக்கு குட்பை

migrant workers little india bus service extended
(Photo: Today)

லிட்டில் இந்தியாவிலிருந்து கிரான்ஜி வேயில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக ஞாயிறு இரவுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

லிட்டில் இந்தியாவிலுள்ள குடியிருப்பில் தீ.. 20 பேர் வெளியேற்றம் – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், சுங்கே கடுட் பகுதிக்கு தனியார் பேருந்து சேவை நீட்டிக்கப்பட்ட மகிழ்ச்சியாக செய்தி வெளியாகியுள்ளது.

இனி, ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கு திரும்புவதில் எந்த சிரமும் இருக்காது என சொல்லப்பட்டுள்ளது.

கிராஞ்சி வே, சுங்கே கடுட் மற்றும் கிராஞ்சி லிங்க் ஆகிய இடங்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு லிட்டில் இந்தியா பேருந்து சேவை (Libs) அக்டோபர் 8 முதல் சேவையை தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், லிட்டில் இந்தியாவிற்கு செல்ல மற்றும் அங்கிருந்தும் திரும்புவதற்கு Libs பேருந்து பாயிண்ட்-டு-பாயின்ட் சேவையை வழங்குகிறது.

கிராஞ்சியில் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோத லாரி சேவையை நம்பியுள்ள நிலை ஏற்பட்டதாக முன்னர் செய்தி வெளியானது.

இந்த வழித்தடத்தில் பேருந்து சேவைகள் எண் 925 மற்றும் எண் 925M இயங்கினாலும், சேவை எண் 925 ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது.

மேலும், 925M ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 7.40 மணிக்கு மேல் இயங்காது.

இந்நிலையில், Libs பேருந்து சேவை வெளிநாட்டு ஊழியர்களுக்கு பயனளிக்கும் என குறிப்பிடப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. $2 கொடுத்து சட்டவிரோத லாரி சேவையில் பயணிக்கும் நிலை

சிறுவன் போல நடித்து, சிறுமியிடம் ஆசையை தீர்த்துக்கொண்ட 44 வயது ஆடவர் – 18 பிரம்படி, 19 ஆண்டுகள் சிறை