வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. $2 கொடுத்து சட்டவிரோத லாரி சேவையில் பயணிக்கும் நிலை

வெளிநாட்டு ஊழிய

கிராஞ்சியில் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோத லாரி சேவையை நம்பியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிராஞ்சி ரயில் நிலையத்திலிருந்து கிராஞ்சி வேயில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு இந்த சட்டவிரோத சேவை வழங்கப்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஸ் காட்டும் “தேக்கா நிலையம்”… பல்வேறு சிறப்புகளுடன் மீண்டும் திறப்பு

இந்த சேவையை பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 4 கிமீ தூரம் பயணித்து வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் பேருந்து சேவைகள் எண் 925 மற்றும் எண் 925M இயங்கினாலும், சேவை எண் 925 ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது.

மேலும், 925M ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 7.40 மணிக்கு மேல் இயங்காது.

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணிக்குப் பிறகு வேலையிலிருந்து திரும்பும் ஊழியர்கள் அப்பகுதியில் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால், கிரான்ஜி ரயில் நிலையத்தியிலிருந்து தங்களுடைய தங்குமிடங்களுக்கு செல்ல $2 வசூலிக்கும் லாரி ஓட்டுனர்களை அவர்கள் நம்பியிருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

தனது முழுப் பெயரைக் கூற மறுத்த புலம்பெயர்ந்த ஊழியர் குணசேகரன் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறுகையில்; ரயில் நிலையத்திலிருந்து அவர் வசிக்கும் தங்கும் விடுதிக்கு தனது முதலாளி போக்குவரத்தை வசதியை ஏற்படுத்தி தரவில்லை என்று கூறினார்.

“ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் பேருந்தில் செல்வேன், ஆனால் இரவில், பேருந்து சேவை இல்லை” என்று திரு சிவகுமார் என்ற ஊழியர் கூறினார்.

“சிங்கப்பூரில் ஒன்றும் இல்லை.. அங்கு வாழ்க்கை நடத்த முடியாது..” என்று கூறிய சிங்கப்பூர் பெண் – கொதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர்