சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்தித்த இந்தோனேசிய விமானப் படையின் தலைமைத் தளபதி!

Photo: MINDEF

இந்தோனேசியா நாட்டின் விமானப்படை தளபதி ஃபட்ஜர் பிரசெத்யோ (Chief of Staff of the Indonesian Air Force (TNI AU), Air Chief Marshal (ACM) Fadjar Prasetyo) மூன்று நாள் அறிமுக பயணமாக, கடந்த ஜனவரி 2- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வந்திருந்தார். அவருக்கு காவலர்களின் அணி வகுப்பு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘OCBC’ வங்கி பெயரில் போலி குறுஞ்செய்திகள்- வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் அறிவுறுத்தல்!

அதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மெல்வின் ஓங் ( Chief of Defence Force Lieutenant-General Melvyn Ong) மற்றும் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் கெல்வின் கோங் (Chief of Air Force Major-General Kelvin Khong) ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார் விமானப்படை தளபதி ஃபட்ஜர் பிரசெத்யோ. பின்னர், நேற்று முன்தினம் (03/01/2022) செம்பவாங் (Sembawang Air Base) மற்றும் சாங்கி விமான தளங்களை (Changi Air Base-East) நேரில் பார்வையிட்டு, சிங்கப்பூர் விமானப் படைக்கு சொந்தமான H225M Medium ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

நேற்று (04/01/2022) பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னை (Minister for Defence Dr Ng Eng Hen), இந்தோனேசிய விமானப் படையின் தலைமைத் தளபதி ஃபட்ஜர் பிரசெத்யோ நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருவரும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர். அதேபோல், பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஜனவரி மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்தோனேசிய விமானப் படைத் தளபதியின் வருகை சிங்கப்பூருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே உள்ள நெருக்கமான மற்றும் நீண்டகால பாதுகாப்பு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. Republic of Singapore Air Force- ‘RSAF’ மற்றும் TNI AU 2021- ல் 40 ஆண்டுகால பாதுகாப்பு உறவுகளை நினைவுகூர்ந்தன.

மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (04/01/2022) நாடு திரும்பினார் இந்தோனேசிய விமானப் படையின் தலைமை தளபதி.