‘OCBC’ வங்கி பெயரில் போலி குறுஞ்செய்திகள்- வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் அறிவுறுத்தல்!

Photo: OCBC Bank

சிங்கப்பூரில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி ‘OCBC’. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள சுமார் 450- க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம், வங்கி பெயரில் போலி குறுஞ்செய்தியை அனுப்பி, அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 8.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை திருடிச் சென்றுள்ளது மோசடி கும்பல். பணத்தைப் பறிகொடுத்தவர்கள், வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

மின்சார வாகன சந்தையில் நுழைந்துள்ள சிங்கப்பூரர்!

‘OCBC’ வங்கி பெயரில் தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கை மூடுவது அல்லது வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்பட்டது குறித்து உங்களுக்கு தெரிவிக்க நாங்கள் ஒருபோதும் குறுஞ்செய்தி அனுப்ப மாட்டோம். உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்த, இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தியை அனுப்ப மாட்டோம். குறுஞ்செய்தியில் உள்ள இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.

பொது போக்குவரத்து வவுச்சர்களைப் பெறுவது எப்படி?- விரிவான தகவல்!

‘OCBC’வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் பேங்கிங் (Mobile Banking App) பயன்பாட்டை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும். www.ocbc.com என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று உள்நுழைவு ஐடி (log-in ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவைக் குறிப்பிட்டு இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறுஞ்செய்தி மூலம் பெறப்பட்ட ஒருமுறை OTP- களை (One-Time Passwords received via SMS) யாருக்கும் வழங்காதீர்கள். சரிபார்க்கப்படாத வலைப்பக்கங்களை கிளிக் செய்யவோ, சேர்க்கவோ வேண்டாம். உங்களுக்கு எப்போதாவது சந்தேகம் இருந்தால், 1800- 363- 3333 என்ற எங்கள் ஹாட்லைன் தொலைபேசி எண்ணை அழைக்கலாம். நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் + 65 6363- 3333 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். இவ்வாறு ‘OCBC’ வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.