பொது போக்குவரத்து வவுச்சர்களைப் பெறுவது எப்படி?- விரிவான தகவல்!

Photo: SMRT Buses Wikipedia

கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. எரிபொருளின் விலை, பராமரிப்பு செலவு உள்ளிட்டவை அதிகரித்து வருவதன் காரணமாக, போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக, தகவல் கூறுகின்றன.

வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுனரை காணவில்லை – போலீசார் விசாரணை

இந்த நிலையில் பொது போக்குவரத்துக் கட்டண உயர்வால் குறைந்த வருமானங்கள் பெறும் குடும்பங்கள் பாதிக்காத வகையில், தலா 30 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள வவுச்சர்களை (Public Transport Vouchers- PTVs), 6,00,000 குடும்பங்களுக்கு வழங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி தாங்கள் பயணம் செய்யும், போக்குவரத்து அட்டையில் பணம் நிரப்பிக் கொள்ளலாம் (அல்லது) மாதாந்திர பயணச் சலுகை அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டமாக வவுச்சர்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, சுமார் 2,80,000- க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 30 சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான வவுச்சர்களைப் பெற்றுக் கொள்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் குளுகுளு குளுமையுடன் தொடங்கிய புத்தாண்டு… வெப்பநிலை 23°C குறையும்!

பொதுப் போக்குவரத்துக்கான வவுச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அதிக குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் வருமான அளவுகோல்களை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, மாதந்தோறும் 1,200 சிங்கப்பூர் டாலர் முதல் 1,600 சிங்கப்பூர் டாலரை தனிநபர் வருமானமாக கொண்டுள்ள குடும்பங்கள், வவுச்சர்களைப் பெற தகுதியுடையவர் ஆவர்.

காணாமல் போன 11 வயது சிறுமியைக் கண்டுபிடித்த காவல்துறை!

வவுச்சர்கள் மூன்று நிலைகளில் விநியோகிக்கப்பட உள்ளது!

1. 2019- ஆம் ஆண்டு பயிற்சியின் போது உங்கள் குடும்பம் பொதுப் போக்குவரத்துக்கான வவுச்சர்களைப் பெற்றிருந்தால், கடந்த மாதம் தானாகவே அறிவிப்புக் கடிதங்களைப் பெற்றிருப்பீர்கள்.

2. https://www.go.gov.sg/ptv என்ற இணையதளத்தில் வரும் ஜனவரி 10- ஆம் தேதி முதல் அக்டோபர் 31- ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

3. நேரில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அல்லது கூடுதல் உதவி தேவைப்படுபவர்கள் பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி முதல் அக்டோபர் 31- ஆம் தேதி வரை உங்கள் அருகில் உள்ள சமூக மையங்கள் (Community Centre) அல்லது கிளப்பில் (Club) விண்ணப்பிக்கலாம்.

மின்சார வாகன சந்தையில் நுழைந்துள்ள சிங்கப்பூரர்!

கோவிட்-19 தொற்றுநோயால் பல குடும்பங்கள் கடினமான பொருளாதார சூழ்நிலைகளை எதிர்கொள்வதை நாங்கள் அறிவோம். மேலும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உதவ தேவையான ஆதரவை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது, 50% தொழிலாளர்கள் வரை பணியிடங்களுக்கு சென்று பணிபுரிய அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த வவுச்சர்கள் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.