நடப்பாண்டில் வேலையிட விபத்துகளில் 30 பேர் உயிரிழப்பு!

Photo: Wikipedia

நடப்பாண்டில் இதுவரை வேலையிடத்தில் நடந்த விபத்துகள் தொடர்பான சம்பவங்களில் மட்டும் சுமார் 30 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ராடின் மாஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் துணை தலைமைச் செயலாளருமான மெல்வின் யோங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கொள்கலன் கிடங்கில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தம் அடைந்தேன். வேலையிடத்தில் நடந்த விபத்துகள் தொடர்பான சம்பவங்களில் மட்டும் இதுவரை சுமார் 30 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் வேலையிடத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆகும்.

சிங்கப்பூரில் மேலும் 4 பேர் கிருமித்தொற்றால் உயிரிழப்பு

நடப்பாண்டில் உயிரிழந்தவர்களின் ஒன்பது பேர் கட்டுமானத் துறையையும், எட்டு பேர் தளவாடப் போக்குவரத்துறையையும் சேர்ந்தவர்கள் ஆவர். வேலையிட விபத்துகளில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல், வெறும் புள்ளி விவரம் அல்ல. அவர்கள் அன்புக்குரியவர்களை, தங்களை நம்பியிருக்கும் குடும்பத்தினரை, விடையளிக்கப்பட வேண்டியக் கேள்விகளைப் பின்னால் விட்டுச் செல்கின்றனர்.

துவாஸ் பகுதியில் உள்ள ஸ்டார்ஸ் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று வெடிப்பு ஏற்பட்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பொது விசாரணை நடைபெற்றது. அதில், அபாய அறிகுறிகளைக் கண்டுக்கொள்ளாதது, சாதனங்களை முறையாகப் பயன்படுத்தாதது போன்ற கவலை அளிக்கக்கூடிய பழக்கங்கள் தெரிய வந்தது.

சிங்கப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை: 29 பேர் கைது – 100 பேர் மீது விசாரணை

பொது விசாரணை முடிவுகளில் இருந்து பாடம் கற்று, நிறுவனங்கள் அபாய அறிகுறிகளைப் புறக்கணிக்காமல், உயிரிழப்பு அல்லது மோசமான விபத்து ஏற்படும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.” இவ்வாறு மெல்வின் யோங் தெரிவித்துள்ளார்.