சிங்கப்பூரில் உள்ள இந்த தங்கும் விடுதி தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிப்பு.!

Infection Cleared Dorm
Pic: Google Street view

சிங்கப்பூரில் நேற்று (20-11-2020) புதிதாக நான்கு பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இவர்களில் இருவர் இந்தோனேசியா நாட்டிலிருந்து வந்த வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்.

மற்ற இருவர்களில், ரஷ்யாவிலிருந்து வந்த குறுகிய கால வருகை அட்டை வைத்திருக்கும் ஒருவரும், மற்றொருவர் ஸ்வீடன் நாட்டிலிருந்து திரும்பிய சிங்கப்பூர்ரரும் அடங்குவர்.

குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 2 இலவச முகக்கவசங்கள்.!

சிங்கப்பூர் வந்த இந்த நான்கு நபர்களும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில், தற்போது வரை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,148ஆக உள்ளது.

Community Sponsored: 

ஹியட் ஹோங் சமூக மன்ற இந்திய நற்பணி செயற்குழு ஆதரவில் பிரம்மாண்டமான தீபாவளி நிகழ்ச்சி.!

இந்நிலையில், 3 கியான் டெக் லேனில் உள்ள ப்ளூ ஸ்டார்ஸ் தங்கும் விடுதியில் (Blue Stars Dormitory) தொற்று அபாயம் இல்லாத இடமாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இங்கு கடந்த 28 நாள்களாக யாருக்கும் கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை.

சிங்கப்பூரில் கடந்த 10 நாட்களாக, சமூக அளவிலும், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலும் எந்தவித கொரோனா பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள தேவாலயத்தில் சிலைகள் சேதம்; ஒருவர் கைது.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…