சாப்பிடும் உணவில் இருந்து மிச்சப்படுத்த வேண்டும் – சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்களை கலங்க வைக்கும் நிலை!

15 companies temporarily barred from hiring foreign workers during heightened safety period

சிங்கப்பூரில் பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பரு­வ­நிலை மாற்­றம், உக்­ரேன்-ரஷ்யா போர் ஆகி­யவை கார­ண­மாக உணவு விலை இவ்­வாண்டு பெரி­தும் பாதிப்­ப­டை­யும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­களை அதி­கம் பாதிக்­கும். தவிர, வெளிநாட்டு பணியாளர்கள் உணவிற்காக செலவிடும் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. நிறுவனங்களால் உணவு, தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டவர்கள் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

தங்களுடைய வருமானத்தை வைத்து, அதிலிருந்து உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வெளிநாட்டு பணியாளர்கள் கடுமையான சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

சேமிப்பின் பெரும்பகுதி உணவுக்கே சென்றுவிடுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். 2030ஆம் ஆண்­டுக்­குள் தனக்­குத் தேவை­யான உண­வுப் பொருள்­களில் 30 விழுக்­காடு உண­வுப்­பொ­ருள்­களை உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்க சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது.

அந்த நிலையை எட்டிவிட்டால், பணவீக்கத்தின் போது பெரிய அளவில் சிரமம் இருக்காது. பண­வீக்­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், உணவு வீணா­கா­மல் அதை மீட்­போர் எண்­ணிக்­கை­யும் உயர்ந்­துள்­ளது.

காலா­வ­தித் தேதி கடந்த பிறகு, விற்­பனை செய்ய முடி­யாத நிலை­யி­லும் கெட்­டுப் போகா­மல் இருக்­கும் உணகள் மீட்கப்பட்டு வருகின்றன. அவ்­வாறு மீட்­கப்­பட்ட உணவை ஏற்­றுக்­கொள்­வோ­ருக்கு அது விநி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஆறு மாதங்­களில் செங்­காங் உணவு மீட்பு அமைப்பு, ஒவ்­வொரு வார­மும் கூடு­த­லாக 15லிருந்து 20 டன் உணவை மீட்­டுள்­ளது. அவ்­வாறு செய்­யா­மல் இருந்­தி­ருந்­தால் அந்த உண­வுப்­பொ­ருள்­கள் குப்பையில் வீசப்­பட்­டி­ருக்­கும்.